தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை..!

செவ்வாய், 27 ஜூன் 2023 (17:29 IST)
தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளதை அடுத்து தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்து தக்காளியின் விலை 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. 
 
இதனை அடுத்து தக்காளியை வியாபாரிகள் பதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தக்காளியை பதுக்கி வைப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தற்காலிக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர்  அறிவுறுத்டியுள்ளார் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்