கஷ்டமோ நஷ்டமோ தனித்து போட்டி.. சரத்குமார் அறிவிப்பு..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:58 IST)
கஷ்டமோ நஷ்டமோ 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்றும் எனவே நமக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள 2026 ஆம் ஆண்டு தனித்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தேர்தலில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் இன்று ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றால் 30 கோடி தேவைப்படுகிறது என்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 100 கோடி தேவைப்படுகிறது என்றும் இதை மாற்ற சீர்திருத்தம் கண்டிப்பாக தேவை என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்