இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்?

திங்கள், 11 செப்டம்பர் 2023 (12:16 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான நேற்றைய இந்திய பாகிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில் இன்று ரிசர்வ் நாளில் இந்த போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் மைதானத்தில் மழை பெய்து வருவதாகவும் வானம் மேகமூட்டமாக காட்சி அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய இரண்டு அடிகளும் முன்னணியில் உள்ளன. 
 
இன்றைய போட்டியில் மழை குறுக்கீட்டு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டால்  பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  
இந்திய அணியை பொறுத்தவரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அடுத்த நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்