மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்: சசிகலா நம்பிக்கை

திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:37 IST)
வரும் மக்களவைத் தேர்தலுக்குள் பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைக்க வாய்ப்பு இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியம் தான். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும். 
 
மேலும் தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும்’ என சசிகலா கூறினார்,.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்