இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு.. இது டிரைலர் தான்.. பயமுறுத்தும் தமிழ்நாடு வெதர்மேன்..!

Mahendran

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (12:28 IST)
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு பிறகு, வரும் அக்டோபர் 25 அல்லது 26-ஆம் தேதியை ஒட்டி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த சுழற்சி புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உட்பட அடுத்த 2-3 நாட்களுக்கு  பலத்த மழை பெய்யும் என்று அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இன்று டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 
இந்த மாத இறுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, சக்கரமாக மாறவும் வாய்ப்புள்ளது என்று அவர் கணித்துள்ளார். இதன் மூலம், தமிழ்நாட்டிற்கு இன்னும் பலத்த மழை காத்திருக்கிறது என்பது உறுதியாகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்