மரணத்துக்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், தனது தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய அல்லது பொய் வழக்கில் சிக்க வைக்க சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் அகில் இறந்ததாக குடும்பத்தினர் கூறினாலும், குடும்ப நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோவின் அடிப்படையில், அவரது தந்தை மற்றும் தாய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அகில் அக்தர் தனது வீடியோவில், "அவர்கள் என்னை பைத்தியம் என்று கூறி தங்கள் நற்பெயரை காப்பாற்றப் பார்க்கிறார்கள். நான் என் மனைவியை திருமணம் செய்யவில்லை; என் மனைவியை என் தந்தைதான் திருமணம் செய்தார்" என்று பேசியுள்ளார்.