கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Mahendran

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (15:45 IST)
chembarambakkam lake
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் சின்னத்தின் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, சென்னையின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
 
ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று மாலை 4 மணி முதல் முதற்கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி உபரி நீர் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட உள்ளது.  ஏரியின் மொத்த நீர்மட்ட அளவான 24 அடியில், தற்போது 21 அடியை எட்டியுள்ளது.
 
ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதால், ஏரியை சுற்றியுள்ள மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்