கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

Mahendran

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (18:33 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மூன்று நாட்களில் ரூ.790 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இது கடந்த ஆண்டு தீபாவளியின்போது விற்பனையான ரூ.438 கோடியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.
 
மூன்று நாள் விற்பனை விவரம்:
 
அக்டோபர் 18: ₹230 கோடி
 
அக்டோபர் 19: ₹293 கோடி 
 
அக்டோபர் 20: ₹266 கோடி
 
மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு அதிகபட்சமாக ₹170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த இடங்களில் சென்னை (₹158 கோடி), திருச்சி (₹157 கோடி), மற்றும் சேலம் (₹153 கோடி) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மொத்த விற்பனை ₹790 கோடியை தாண்டி சென்றுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்