சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
இதனையடுத்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.