முடிந்தது சூரசம்ஹாரம்; திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அனுமதி!

வியாழன், 11 நவம்பர் 2021 (10:31 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்து முடிந்த நிலையில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் அதை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முதல் முன்பதிவு தரிசனம் மற்றும் பொதுதரிசனம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்