துபாயில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் “நான் விராட் கோலியின் தொழில் நேர்த்தியைப் பார்த்து வியக்கிறேன். நான் அவரின் பிட்னெஸ் மற்றும் செயல்பாடுகளை பாராட்டுவேன். நிறைய பேர் அவர் ஃபார்ம் அவுட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இன்று அவர் மிக எளிதாக விளையாடினார்” எனக் கூறியுள்ளார்.