மூன்று நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை !

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:19 IST)
விழுப்புரத்தில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. இவரின் வீடு கடந்த 3 நாட்களாக மூடிக் கிடந்துள்ளது. இன்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

போலிஸார் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என 4 பேரும் இறந்து கிடந்துள்ளனர். நான்கு பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்குப் போலிஸார் அனுப்பியுள்ளனர். சுந்தரமூர்த்தி நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானதால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்