இந்நிலையில் காந்தியின் மரணம் குறித்து சர்ச்சையானக் கேள்வி ஒன்று பள்ளி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி நடந்த தேர்வு ஒன்றின் வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது.