துரத்தி சென்று கடித்து குதறும் வெறிநாய்: பீதியில் மக்கள்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (09:33 IST)
கோப்புப்படம்
சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் வெறிநாய் ஒன்று பல பேரை கடித்து குதறிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்து உள்ள திருவொற்றியூரில் வெறிநாய் ஒன்றின் நடமாட்டம் மற்றும் தாக்குதலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முன்தினம் கல்லூரி மாணவி ஒருவரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. அதை தொடர்ந்து அந்த நாளில் மட்டுமே 8 பேரை அந்த நாய் கடித்து தாக்கியதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மக்கள் பீதியில் இருந்த நிலையில் நேற்று 9 வயது சிறுவன் பிரசாத் என்பவரை அந்த நாய் கடித்து காயப்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒன்ரறை வயது குழந்தை அஜித்தையும் அது தாக்கியுள்ளது. இதனால் நேற்று பொதுமக்கள் அந்த நாயை பிடிக்கும்படி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி சுகாதார குழுவினர் கிராமப்புறத்தில் சுற்றித்திரிந்த நாயை வலைவீசி பிடித்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் அந்த வெறிநாய் தாக்குதலால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்