கொரோனா நோய் தொற்று: போர்க்கால நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வேண்டுகோள்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:33 IST)
கொரோனா நோய்த்தொற்றை தமிழகத்தில் ஒழிக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகிய பணிகளை தமிழக அரசு கவனித்து வந்த போதிலும், தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கணக்கில் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்/ அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம்  தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்.  அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்