அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

Mahendran

திங்கள், 19 மே 2025 (17:47 IST)
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ம், 12ம் வகுப்பு தேர்வுகள் வெளியான நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு  எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய QR கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த புதிய முயற்சியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் “சூப்பர்” என குறிப்பிட்டிருப்பதன் மூலம், இந்த முயற்சி பெற்றோர்கள் மற்றும் பள்ளிக்கல்வி சமுதாயத்திடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.
 
QR கோடு வசதி மூலம் விண்ணப்பதாரர்கள் விரைவாக, சுலபமாக விண்ணப்பங்களை பெறலாம் என்பதுடன், நேரம் மற்றும் முயற்சி குறையும் என பள்ளி நிர்வாகமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த முறையால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சீராகவும், விரைவாகவும் நடைபெறுவதில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்