முதுமலை யானைகளுக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் என்ன?

ஞாயிறு, 13 ஜூன் 2021 (08:54 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் ஏற்பட்டு வரும் நிலையில் முதுமலையில் யானைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகியவை அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் பூங்காவில் 10 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் ஒரு சிங்கம் உயிரிழந்தது.

இந்நிலையில் முதுமலை சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் யானைகளுக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்