பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (13:47 IST)
தன் 71வயது பிறந்த நாளையொட்டி,  நடிகர் விஜயகாந்த் நீண்ட நாட்கள் கழித்து கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

தமிழ் சினிமாவின் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த்.  இவர், கடந்த  2005 ஆம் ஆண்டு மதுரையில் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.

அரசியலில் தூய்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து, கடைக்கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்பதை கட்சியின் கொள்கைகளில்  ஒன்றாகவுள்ளது.

விஜய்காந்த்  முன்பு போன்று ஆக்டிக்வாக இல்லை. அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்று அவரது 71 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை நேரில் சந்திப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அவர் இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். அவரை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிற ரசிகர்களும், அவரை எப்படியாவது பார்க்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இருக்கின்றனர்.

அவ்வப்போது அரசியல் விவகாரம் பற்றி அறிக்கை மற்றும் வாழ்த்துகளை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரும்  நிலையில், இன்று  தன் 71வயது பிறந்த நாளையொட்டி,  நடிகர் விஜயகாந்த் நீண்ட நாட்கள் கழித்து தேமுதிக கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.அப்போது தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.  

மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ள  அவரது இளைய மகன் சண்முகபாண்டியனின் அடுத்த படத்  படத்தலைப்பையும் ( படைத்தலைவன்) இன்று அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்