நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் இருந்த அவரின் மைத்துனர் சுதீஷ், 2வது சுற்றிலேயே சோகமாக வெளியேறிய சம்பவம் தெரிய வந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டார். அப்போது முதல் சுற்றில் வாக்குகள் எண்ணும்போதே விஜயகாந்த் வெறும் 1494 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்துள்ளார்.
இரண்டாவது சுற்றில் 4217 வாக்குகளின் பெற்று அதே மூன்றாம் இடத்தில் இருந்துள்ளார். அதனால், அப்போதே விஜயகாந்த் தோற்பது என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இதனால், வாக்குச்சாவடியில் இருந்த விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் சோகத்துடன் வெளியேறினார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.