முக்கிய ஆவணத்துடன் ஓடிய விஜயபாஸ்கரின் கார் டிரைவர்: அடித்து உதைத்த சிஆர்பிஎஃப்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (16:45 IST)
இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சரின் கார் டிரைவர் முக்கியமான ஆவணத்தை எடுத்துவிட்டு ஓடியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
இன்று காலை விஜயபாஸ்கரின் வீட்டில் நுழைந்த வருமான வரித்துறையினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே போக கூடாது சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என கூறினர். பின்னர் துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டது.
 
அப்போது வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வெளியே அவரது உறவினர் ஒருவர் கையில் ஆவணங்களுடன் வந்தார். இதனை கவனித்த துணை ராணுவப்படையினர் அதனை பறிமுதல் செய்ய முயன்றனர்.
 
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த விஜயபாஸ்கரின் கார் டிரைவர் அந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். அவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் மடக்கி பிடித்தனர். ஆனால் அவர் மதில் சுவர் வளியே அந்த ஆவணத்தை வெளியே தூக்கி வீசிவிட்டார்.
 
வெளியே நின்று கொண்டிருந்த விஜயபாஸ்கரனின் ஆதரவாளர் ஒருவர் அதனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவரை சிஆர்பிஎஃப் வீரர்களால் பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வெளியே வீசிய அந்த கார் டிரைவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் தடியால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அடுத்த கட்டுரையில்