குளியலில் ராதிகா; கதவை தட்டிய வருமான வரித்துறை: சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (16:30 IST)
ராதிகா சரத்குமார் குளித்துக் கொண்டிருந்த போது வருமான வரித்துறையினர் வந்து கதவைத் தட்டினர் என்று சரத்குமார் கூறியுள்ளார்.


 
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில், வருமான வரித்துறையினர் சரத்குமார் வீட்டில் அதிரடி  சோதனை நடத்தினர். இது குறித்து சரத்குமார் கூறியதாவது, என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்று கேலியாக கூறினார்.
 
இதை தவிர்த்து சோதனை நடத்துவதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றும் குறிப்பிட்டு, அதிகாலை 5.45 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என கேட்டனர் ஐடி அதிகாரிகள் ஐடி அதிகாரிகள் சோதனை என்பது ஒரு சதி. இதை விட ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது அநாகரிகமாக கதவை தட்டினர் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்