தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; விஜயபாஸ்கர் உறுதி

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:41 IST)
சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா வைரஸால் இது வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, தைவான், தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”கிங் இன்ஸ்டிட்யூட்டில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுப்படி சீனாவிலிருந்து தமிழகம் வந்த 12 பேரில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதன் மூலம் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியாகிறது” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பதிவில், “தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்