விஜய் கட்சி ஆரம்பிக்க ராகுல் காந்தி தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததாகவும் அப்போது காங்கிரஸ் கட்சியில் தனக்கு ஒரு பதவி கொடுக்க கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் ராஜீவ் காந்தி உங்களுக்கு இருக்கும் வலிமைக்கு தனியாகவே சொந்த கட்சி நடத்தலாம், எதற்காக இன்னொரு கட்சியில் நீங்கள் பதவி கேட்கிறீர்கள் என்று சொன்னதாகவும் அவர் கொடுத்த தைரியத்தில் தான் விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து இருப்பதாகவும் விஜயதாரணி ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பிக்க ஏதாவது ஒரு அரசியல் பின்னணி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தான் அது ஒரு ராகுல் காந்தி தான் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து பிரச்சனை ஏற்பட்டால் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இதெல்லாம் யூகங்களாகவே மட்டுமே உள்ளது என்பதும் 2026 தேர்தல் வரும் போது தான் எந்தெந்த கட்சி எந்தெந்த கூட்டணியில் உள்ளது என்பது தெரிந்து கொள்ள முடியும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.