நகர்புற உள்ளாட்சி தேர்தல்; வேட்பாளர்கள் யார்? – விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (09:49 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் நிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய்க்கு சொந்தமான பனையூர் பண்ணை இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்