மகளை கற்பழிக்க முயன்ற தந்தை; அடித்துக் கொன்ற தாய்! – விடுவிக்க போலீஸ் முடிவு!

சனி, 29 ஜனவரி 2022 (09:20 IST)
சென்னையில் மகளை கற்பழிக்க முயன்ற தந்தையை தாயே அடித்துக் கொன்ற சம்பவத்தில் தாயை விடுவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ப்ரீத்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல நேற்று குடித்துவிட்டு வந்த ப்ரதீப் மதுபோதையில் தனது 20 வயது மகளை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

மகளை காப்பாற்றுவதற்காக ப்ரீத்தா, ப்ரதீப்பை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் ப்ரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த ஓட்டேரி போலீஸார் ப்ரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், ப்ரீத்தாவையும் கைது செய்தனர்.

ப்ரீத்தா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணையில் ப்ரீத்தாவிற்கு ப்ரதீப்பை கொல்லும் முன்திட்டம் எதுவும் கிடையாது என்றும் மகளை காப்பாற்ற தற்காப்புக்காக தாக்கினார் என்றும் தெரிய வந்துள்ளாதால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 100ன் படி தற்காப்பு உரிமையில் இறப்பு என்பதன் கீழ் வழக்குப்பதிவு செய்து ப்ரீத்தாவை விடுவிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்