விஜய் கட்சி கொடியில் இரு போர் யானைகள்..இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்..!

Siva
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:20 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் அந்த கொடியில் இரண்டு போர் யானைகள் இருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அக்காட்சியின் தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு வண்ணங்கள் கொண்ட கொடியாக இருக்கும் என்றும் இந்த கொடியின் நடுவில் இரண்டு போர் யானைகள் இருக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலைய அலுவலகத்தில் இன்று காலை 9.15 கொடியை கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார். மேலும் கட்சிக்கான பிரத்யேகமாக பாடல் இயற்றப்பட்டதாகவும் அந்த பாடலையும் அவர் அறிமுகம் செய்ய இயற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தமிழகம் முழுவதும் போட்டியிடும் என்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இன்றி மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரை இதுவரை நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில் விஜய்யின் கட்சி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்