திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்: தவாக தலைவர் வேல்முருகன்

Mahendran
புதன், 18 டிசம்பர் 2024 (10:00 IST)
திமுக கூட்டணியை மறுபரிசீலனை  செய்வோம் என தமிழக வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் வேல்முருகன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இது குறித்து அவர் மேலும் கூறிய போது, எனது பண்ருட்டி தொகுதியில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றும் வரை எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

வரும் பட்ஜெட் தொடரில் எனது கோரிக்கைகள் குறித்த அறிவிப்பையும் அதற்கான விரிவான செயல் திட்டத்தையும் திமுக அரசு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி திமுக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு பதவி முக்கியமல்ல, கூட்டணியும் முக்கியமல்ல. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பேன். அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், எல்லா கட்சிகளும் விரும்பும் சாதிவாரி கணக்கெடுக்கும் நடத்தப்படாமல் இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கழகம் வெளியேறும் என்றும் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்