ஆந்திரா அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (22:43 IST)
புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தும் நடவடிக்கையை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணையே கட்டக் கூடாது என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையின் 5 அடி உயரத்தை 10 முதல் 20 அடி அளவுக்கு உயர்த்தும் செயலை ஆந்திரா அரசு செயல்படுத்தி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.
 
ஆந்திர அரசின் இந்த செயலால் தமிழகத்தில் 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும். இதை நம்பியுள்ள விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். தமிழகத்தில் பாலாறு என்ற நதி உள்ள சுவடே காணாமல் போகும்.
 
புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தும் நடவடிக்கையை கண்டித்து ஜூலை 8 ம் தேதி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்