வேலூர் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை

திங்கள், 10 ஜனவரி 2022 (13:00 IST)
வேலூர் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை
வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்