டெல்லியில் 300 காவலர்களுக்கு கொரோனா!

திங்கள், 10 ஜனவரி 2022 (11:21 IST)
டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் உள்பட 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு. 

 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டில் பாதிப்பு அதிகம் காணப்படும் 2வது மாநிலமாக டெல்லி உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
 
கொரோனா தொற்று பரவலால் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படி இருந்தும் டெல்லியில் புதிதாக மேலும் 22,751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்