புலி பிடிக்குமா? மான் பிடிக்குமா? உங்களுக்கு பிடித்த விலங்கை தத்தெடுக்கலாம்! – அழைப்பு விடுக்கும் வண்டலூர் பூங்கா!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:04 IST)
வண்டலூர் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் வன விலங்குகளை தத்தெடுத்துக் கொள்ள பூங்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை வண்டலூரில் உள்ள காட்டுயிர் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவுக்கான செலவினங்கள் சுற்றுலா வரும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் தொகையை வைத்து நிர்வகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாள்தோறும் விலங்கினங்களுக்கு உணவு வழங்கும் செலவுகளுக்காக விலங்குகளை தத்தெடுக்கும் முறையை வண்டலூர் பூங்கா பின்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது வண்டலூர் பூங்காவில் உள்ள 2,382 விலங்குகளை தத்தெடுத்துக் கொள்ள வண்டலூர் பூங்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ரூ.100 செலுத்தி இந்த தத்தெடுப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும், விருப்பப்பட்ட விலங்குகளை தத்தெடுத்தால், தத்தெடுப்பவர் வழங்கும் தொகையில் அந்த விலங்கிற்கு உணவளித்தல், பராமரித்தல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்