சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு சார்பில் ஆஜராக மேலும் 44 வழக்கறிஞர்களை நியமித்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள் ஆன்லைனில் தொடரும் என்றும் ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அவர்கள் அறிவித்துள்ளார். நீதிமன்றப் பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வருவார்கள் என்றும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.