தொடர் கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Siva

புதன், 17 ஜூலை 2024 (22:27 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக நாளை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
மேலும் கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது ஜூலை 18ஆம் தேதி விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார் 
 
பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்