ஆப்கன் - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போரையும் நான் நிறுத்துவேன் என ட்ரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலாக அமெரிக்க விவகாரங்களில் கவனம் செலுத்துவதை விட உலக நாடுகள் இடையேயான போரை நிறுத்தும் சமாதான புறாவாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார் ட்ரம்ப். அமெரிக்க தலையீடு இல்லாமல் தாங்களே போர் நிறுத்தத்தை நாடுகள் ஏற்படுத்திக் கொள்ள நினைத்தாலும் நான் தான் நிறுத்தி வைப்பேன் என அடம்பிடிக்காத குறையாக அவர் செயல்பட்டு வருவது இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்திலேயே வெளிப்பட்டது.
தற்போது உலக அளவில் பெரிதாக பேசப்பட்டு வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்துவதற்காக இஸ்ரேல் சென்றுள்ளார் ட்ரம்ப். மேலும் ரஷ்யா - உக்ரைன் போரையும் நிறுத்த முயற்சித்து வருகிறார். இதற்கிடையே தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது.
இதுகுறித்து தனது கவனத்திற்கு வந்ததாக பேசிய ட்ரம்ப் “போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற பிறகு அந்த போரையும் நிறுத்துவேன். காசாவில் போர்நிறுத்தம் என்பது நான் நிறுத்தும் 8வது போராகும்” என பெருமையாக கூறியுள்ளார்.
Edit by Prasanth.K