கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 9 பேர் பலி.. 35 வீடுகள் சேதம்.. மீட்பு பணிகள் தீவிரம்..!

Siva

புதன், 17 ஜூலை 2024 (07:14 IST)
கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மழை காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்து விட்டதாகவும் 35 வீடுகள் வரை இதுவரை சேதம் அடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து இருந்த நிலையில் கேரளாவில் நேற்று மிக கனமழை பெய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை  பெய்த மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் ஓடும் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவரும், பாலக்காட்டில் வீடு இடிந்து தாய், மகனும் உயிரிழந்தனர்.

அதேபோல் கண்ணூரில் நீரில் மூழ்கி 2 பேர், திருவல்லா, வயநாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மலப்புரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் 35 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்