16 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran

புதன், 17 ஜூலை 2024 (11:46 IST)
இன்று பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்