இது ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! – முடிவுக்கு முன்னரே வைரமுத்து வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (14:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தேர்தல் வெற்றி அறிவிக்கும் முன்னரே திமுகவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய நிலவரப்படி தமிழகத்தின் பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னணியில் உள்ளது. இந்நிலையில் திமுகவிற்கு வாழ்த்து செய்தி கூறியுள்ள கவிஞர் வைரமுத்து “இந்த வெற்றி ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்