மாணவர்களுக்கு தமிழில் எழுதக் கூட தெரியவில்லை: வைரமுத்து கருத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:41 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க கூட தெரியவில்லை என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் தெரிவித்துள்ள நிலையில்  இதனை நெட்டிசன்கள் கிண்டல் எடுத்து வருகின்றனர்.

நகர்ப்புறத்தில் பெரும்பாலும் பள்ளிகளில் தமிழ் மொழியை படிப்பதில்லை என்றும் அதற்கு பதிலாக  பிரெஞ்சு சமஸ்கிருதம் உருது உள்ளிட்ட மொழிகளை படித்து வருவதாகவும் கூறப்படுகிறது  

இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுதப்பட தெரியவில்லை என்று வைரமுத்து வேதனையுடன் தெரிவித்துள்ளதை நெட்டிசன் கிண்டல் அடித்து வருகின்றனர்

இதுதான் திராவிட மாடல்  சாதனை என்றும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் மொழியை எந்த அளவுக்கு வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு வைரமுத்துவின் வாக்குமூலமே சாட்சி என்றும் கூறி வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்