எனக்குள் சீதையை எட்டிப்பார்த்த இயக்குனர் - சாய்பல்லவி நெகிழ்ச்சி

சனி, 14 அக்டோபர் 2023 (17:18 IST)
3 பாகங்களாக உருவாகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக  நடிக்கவுள்ளது பற்றி சாய் பல்லவி  கருத்து தெரிவித்துள்ளார்.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம், படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யாஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கவுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது.

மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பில் யாஷ் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும், இந்த படத்தில் சீதையாக சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் 3 டி தொழில் நுட்பத்தில்  உருவாகும் இப்படத்தில் சீதையாக   நடிப்பது பற்றி சாய்பல்லவி கூறியதாவது: ‘இயக்குனர் நித்திஷ் திவாரி எனக்குள் சீதையை எட்டிப்பார்த்தார் என்ற உணர்வு மகிழ்ச்சியை தருகிறது….இது நிஜமாகவே அரிதாகக் கிடைக்கும் அதிர்ஷ்டம்’ என்று கூறியுள்ளார்.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்