அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர்: வைகோ

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (12:04 IST)
அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும்  ஆளுனர் திருப்பி அனுப்பி உள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி;
 
உச்சநீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்த உடன் அவசர அவசரமாக 10 சட்ட முன் வடிவுகளையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்;
 
தமிழ்நாடு அரசு நவம்பர் 18ம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவை விதி 143 ன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;
 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்"
 
என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்