மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு – அன்புமணி மிஸ்ஸிங்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (13:36 IST)
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களில் 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதால், பிறகு அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பதவியேற்ற அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரண்டாவதாக பதவியேற்ற வைகோ ‘ என்னும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் தற்போது ஏற்க இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்று விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்’ எனக் கூறினார். அனைவருக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்துக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்