வேலூர் மாவட்டம், செம்பாக்கத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாமில், அமைச்சர் துரைமுருகன் வருகை தந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 2025-ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென பெண்கள் அவரை சுற்றி வளைத்து தங்கள் குறைகளை அடுக்கடுக்காக சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
செம்பாக்கத்தில் அமைச்சரை பெண்கள் சூழ்ந்து கொண்ட நிகழ்வு, அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைவதில் உள்ள சவால்களை காட்டுவதாக அமைந்துள்ளது.