பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

Siva

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (16:24 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். 
 
பிரதமரின் வருகையையொட்டி, இம்பாலில் உள்ள காங்லா கோட்டை மற்றும் சுராசந்த்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இந்த பயணத்தின்போது, ரூ. 1,200 கோடி மதிப்புள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், சுமார் ரூ. 8,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், மோதல்களுக்கு பிறகு மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரதமரின் இந்த வருகை, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிப்பதாகக் கருதப்படுகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்