வைகுண்டராஜன் மகன் நெல்லையில் போட்டியா?

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (08:00 IST)
ஒரு காலத்தில் அதிமுகவுக்கு நெருக்கமாக இருந்த தொழிலதிபர் வைகுண்டராஜன், தாதுமணல் விவகாரத்திற்கு பின் திமுக ஆதரவாளராக மாறினார். ஒவ்வொரு தேர்தலின்போது வைகுண்டராஜன் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது வரும் பாராளுமன்ற தேர்தலில் வைகுண்டராஜன் மகன்களில் ஒருவரே வேட்பாளராக போவதாக வதந்திகள் பரவி வருகிறது
 
சமீபத்தில் திமுக பிரமுகர்களில் ஒருவரை வைகுண்டராஜன் மகன் சந்தித்து பேசியதாகவும், நெல்லை தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக கூறியதாகவும் இதற்கு திமுக தலைமை ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் நெல்லை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறது. நெல்லை தொகுதியின் வேட்பாளர் வைகுண்டராஜன் மகனா? அல்லது பீட்டர் அல்போன்ஸா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் சரத்குமார் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத்குமார் போட்டியிட்டால், இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்