வரும் 26 ஆம் தேதி (நாளை) மூன்றாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி விரைவாக எடுத்துக் கொள்ள கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த 19 ஆம் தேதியும் சிறப்பு முகாம் போடப்பட்டது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் ஆர்வமாக வருகை தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வாரமும் வரும் 26 ஆம் தேதி மூன்றாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முறை சிறப்பு முகாமில் 20,000 மையங்களில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ம. சுப்பிரமணியன் பேட்டி.