நாளை தடுப்பூசி செலுத்தப்படும்- சென்னை மாநகராட்சி

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (22:10 IST)
நாளை சென்னையில் உள்ள 45 தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களாக சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிய நிலையி மீண்டும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 45 தடுப்பூசி மையங்களிலும் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் ஒவ்வொரு மையத்திற்கும் தலா 300 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்