உத்தவ் தாக்கரே பதவியேற்பு: கலந்து கொள்வாரா ஸ்டாலின்?

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (18:29 IST)
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க உள்ளன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த புதிய ஆட்சிக்கான பதவியேற்பு நாளை நடைபெற இருக்கிறது.

இதில் பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் உள்ள கட்சிதான் என்றாலும் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் கட்சியாகவே திமுக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் முதல்வராக பதவியேற்கும் அந்த விழாவிற்கு ஸ்டாலின் செல்வாரா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. முக ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வாழ்த்து கூறியுள்ளதால் பெரும்பாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவர் கலந்து கொண்டால் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உலா வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்