தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தி வந்த இடஒதுக்கீடு உரிமைகளை நிராகரித்துவிட்டு மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும் புறம்தள்ளும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்களிலும், நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளிலும் அநீதி இழைத்து வருவதாக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ”மத்திய அரசுக்கு பணிந்து இந்த அநீதி குறித்து எதுவும் பேசாமல் சமூகநீதிக்காக தான் உழைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, புலிகேசி புறா வறுத்து தின்றது போல எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்.” என்றும் தெரிவித்துள்ளார்.