தலைவர் பதவியை ஏற்க பாரதிராஜாவுக்கு வலியுறுத்தல் ...

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (13:58 IST)
தமிழ் திரைப்பட சினிமாவில் உள்ள முக்கியமான இயக்குநர்,இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவர் தனது தனித்துவமான கதை சொல்லல், பட இயக்கம் காரணமான தமிழ் சினிமாவில் உச்சபட்சமான நிலைக்கு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி பாரதிராஜா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மற்ற பதவிகளுக்கான  தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில்ம் தலைவர் பதவியி இருந்து தான் விலகப்போவதாக பாரதிராஜா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
 
அதில்,  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் வரும் சங்கடங்ளைத் தவிர்ப்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்கிறேன். முறையாக தேர்தல் பங்கேற்று வெற்றி பெற்றி பெற்ற பின் தலைராக விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து வரும் 14 ஆம் தேதி மற்ற பதவிகளூக்காக நடக்க இருந்த தேர்தல் தடைபட்டது. இந்நிலையில் ராஜினாமா செய்த பாரதிராஜாவே தலைவர் பதவியை ஏற்க வேண்டும் கோரி இணைஇயக்குநர்கள் பாரதிராஜாவின் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் பாரதிராஜா ஒரு திரைப்படத்துக்காக தேனியில் உள்ள நிலையில் அவரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்