2021 பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்: திமுக தரப்பினர் அதிருப்தி

வியாழன், 4 ஜூலை 2019 (07:09 IST)
ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தாலும் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
 
ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒருவேளை தீர்ப்பு வந்தால் நிச்சயம் அதிமுகவிற்குள் ஒரு பிளவு ஏற்படும். பதவியிழந்த ஓபிஎஸ், மீண்டும் தர்மயுத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அந்த சலசலப்பில் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்களை பிடித்து ஆட்சி அமைத்துவிடலாம் என திமுக கனவு கண்டது. 
 
 
ஒருவேளை அப்படி நடக்காவிட்டாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அதில் வெற்றி பெற்று எளிதில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நினைப்பும் திமுகவுக்கு இருந்தது. ஆனால் வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாததால் திமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பில் உள்ளனர்.
 
 
இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் தினகரன் கூடாரம் காலியாகி எடப்பாடியாரின் அதிமுகவின் பலம் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது.

மேலும் பொதுத்தேர்தலின்போது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து திமுகவின் வெற்றியை தடுத்துவிட்டால் முக ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே கடைசி வரை போய்விடும் என்ற பயமும் திமுகவினர்களிடையே உள்ளதாக தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்